உள்ளடக்கத்துக்குச் செல்

டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம்
வகைமாநிலப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2021
வேந்தர்ஆர். என். ரவி[1]
துணை வேந்தர்முனைவர் எஸ். அன்பழகன்
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்

டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் (Dr.J. Jayalalithaa University) என்பது, வேலூரில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தினை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தில் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டம், 2021 (தமிழ்நாடு) கீழ் உருவாக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்ததன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 05ஆம் நாள் இதற்கான சட்ட முன்வரைவினை உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தாக்கல் செய்தார். இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக முனைவர் எஸ். அன்பழகன் மார்ச் 01 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.[2] இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகள் வரும்.[3]

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு

[தொகு]

முழுமையாக செயல்படாமல் இருந்த இப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான சட்டமுன்வடிவானது ”2021ம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்தம் மற்றும் நீக்கறவு சட்டம்” என்பதை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. https://www.dinamalar.com/news_detail.asp?id=2721280&Print=1
  3. https://www.thehindu.com/news/national/tamil-nadu/bill-on-new-varsity-to-be-set-up-in-villupuram-tabled/article33764010.ece
  4. "ஜெயலலிதா பல்கலை. இணைப்பு மசோதா நிறைவேறியது - மறியல் செய்த அதிமுக எம்எல்ஏக்கள் கைதாகி விடுவிப்பு". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.

மேலும் காண்க

[தொகு]